மாணவர்கள் அனைவருக்கும் 2 GB டேட்டா இலவசம்!! முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த ஈபிஎஸ் !!

0
71

தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2GB இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று ஈ.பி.எஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். மேலும், அம்மா அவர்கள் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயர் கல்வி மேம்படுத்தப்பட்டது.

திமுக கட்சி ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 32.1 விழுக்காடாக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது 51.40 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெரிய மாநிலங்களுடன் குறிப்பிடும்போது முக்கியமாக கேரளாவுடன் போட்டி போட்டு தமிழகம் உயர் கல்வியில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 17 புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் போன்றவை துவங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்ந்த கேரளாவில் தற்போது மிஞ்சி உள்ளோம் என்பது குறிப்பிடதக்கது. 2020 -2021 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் படி, கல்விக்காக அதிமுக அரசு 34,68,774 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் இடைநிற்றல் வெகுவாக குறைந்துள்ளது.

ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளது. மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அனைத்து மாணவர்களும், மாணவிகளும் பங்கேற்க இயலவில்லை. முக்கியமாக அனைத்து மாணவர்களும் அல்லது பெற்றோர்கள் ஆண்ட்ராய்டு கைபேசியை அல்லது அரசு வழங்கிய வைத்திருந்தாலும் கூட அதில் கலந்து கொள்ள இயலவில்லை.

எனவே மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்க உத்தரவிட்டது. தமிழகத்தின் எல்காட் நிறுவனம் மூலமாக விலை இல்லாத அட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு சிறந்த முறையில் அவர்கள் கல்வி பயின்றார்கள். மேலும், கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை என்ற காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து வருகின்றது.

தற்போது கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை எனில் ஆன்லைன் வகுப்பே நடக்கும். நடுத்தர வர்க்கத்தில் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களால் மாதம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவு செய்து அம்மாவின் அரசு அட்டை வாங்க முடியாத நிலையில், அவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த திமுக அரசு ஏற்கனவே அதிமுக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா 2GB அட்டைகளை புதுப்பித்து தருமாறு முதல்வருக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
Jayachithra