இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

0
109

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விதத்தில் பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அமெரிக்காவில் சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சுமார் நான்கு மில்லியன் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் அமெரிக்கா கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, போஸ்டன், வாஷிங்டன், டிசி பாஸ்டன்,பிலாடெல்பியா, டெட்ராய்ட், மியாமி, அட்லாண்டா, டல்லாஸ்,சியாட்டில், பினிக்ஸ்,மியாபோலீஸ்,டென்வர்,லாஸ் வேகஸ்,ஆர்லாண்டோ போன்ற பகுதிகளில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நியூயார்க்கில் உள்ள ஹட்சன் நதியில் வருடம் தோறும் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடப்படும் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும். அதோடு பல கல்வி நிறுவனங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் அதிபர் மளிகையான வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கு முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட தொடங்கிய நிலையில், தற்போது வரையில் அது பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் பல மாகாணங்களில் தீபாவளிக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் இந்தியாவில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவில் தற்போதைய கொண்டாட்டங்கள் காலகாலமாக நடைபெற்று வருகின்றன. பல மாகாணங்களில் தலைநகர் கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலை நகர் வாஷிங்டனில் அரசு சார்பாக தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட உள்ளது. நியூயார்க் நகரில் இருக்கின்ற புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் செனட்டர் சர்க்யூமர், இந்திய துணை தூதர் உட்பட பலர் பங்கேற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது அடுத்த வருடம் முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று நியூயார்க் நகர மேயர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியைச் சார்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தன்னுடைய இல்லத்தில் நேற்று தீபாவளியை கொண்டாடினார். விளக்கு அலங்காரத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதில் இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். அதேபோல ஃப்ளோரிடாவில் இருக்கின்ற வீட்டில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் 200க்கும் அதிகமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

அதோடு வரும் திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் தன்னுடைய மனைவி ஜில் பைடனுடன் இணைந்து தீபாவளி கொண்டாட உள்ளார். அதோடு தீபாவளி விருந்து வழங்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட ஏராளமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் 26 ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.