குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!

0
116
Do this if you want a drinking spree dude! Awful to snatch the necklace!
Do this if you want a drinking spree dude! Awful to snatch the necklace!

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!

தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று நம்பவைத்து 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில் தூத்துக்குடி சுந்தராபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அருணாச்சல பாண்டி. இவருடைய மனைவி சீதாலட்சுமி. 30 வயதான இவர் மற்றும் இவரது கணவன் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

அருணாச்சல பாண்டிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை மறக்க வைப்பதற்காக சிறப்பு பூஜை நடத்தலாம் என்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த பத்ரகாளி முத்துவின் மனைவி என்ன திவ்யா என்ற 22 வயதான பெண் சீதாலட்சுமி உதவி புரிவதாக கூறியுள்ளார்.

அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும். ஆனால் அந்த பூஜையில் நகையை வைத்து தான் பூஜை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த பெண்ணை முழுதாக நம்பிய சீதாலட்சுமி தன்னுடைய 22 பவுன் தங்க நகையை பூஜைக்காக என்று அவரிடம் கொடுத்துள்ளார். பூஜைகள் முடிந்து சில வாரங்கள் ஆகியும் நகையை திவ்யா திரும்ப கொடுக்கவில்லையாம்.

அதன் காரணமாக சீதாலட்சுமி திவ்யாவிடம் அடிக்கடி நகையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அப்போது திவ்யா மற்றும் அவரது கணவன் பத்ரகாளி முத்து ஆகியோர் இருவரும் நகையை கொடுக்க முடியாது என கூறி  சீதாலட்சுமியை மிரட்டியுள்ளார்கள். அதன் காரணமாகவே நகை மோசடி செய்யப்பட்டு விட்டதாக சீதாலட்சுமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு தான் அக்கம் பக்கத்தினரிடம் நம் வீட்டு விசயங்களை ஒப்பிக்க கூடாது. ஏனென்றால் அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தற்போது யாருக்கும் இல்லை. அதுதான் முக்கியமான விஷயம்.