சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

0
70

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 24-ந் தேதி) முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகரான கிவ் நகரை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், போரில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறையில் உள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியாயப்படி இது சரியான முடிவு இல்லை என்றபோதும் பாதுகாப்பு நிலைப்பாட்டில் பார்க்கும்போது நகரம் தாக்குதலுக்கு உள்ளாவதால் அதை பாதுகாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நியாயமானது தான் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K