மூன்றாவது அலை பரவுவது பொது மக்கள் கையில்தான் இருக்கிறது! உண்மையை சொன்ன மருத்துவ நிபுணர்கள்!

0
51

நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. நோய் பரவல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. அப்படி கடுமையான ஊரடங்கு உத்தரவை போட்டிருந்தாலும் கூட இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருந்தது.காரணம் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அதன் காரணமாக, நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியது.

அதன் பின்னர் மெல்ல, மெல்ல பொதுமக்கள் நோயின் தாக்கத்தை உணர தொடங்கியது. முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கினார்கள் இதனால் மெல்ல ,மெல்ல நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியது.ஒரு கட்டத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று இல்லை என்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் திடீரென்று நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்சமயம் நோய் தொற்று பரவலின் மூன்றாவது அலை பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் நோய் தடுப்பு விதி முறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்துதான் மூன்றாவது அலை இருக்கும் என்று தேசிய நோய்த்தடுப்பு காண தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா கூறியிருக்கிறார்.நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை படிப்படியாக இந்தியாவில் குறைந்து வருகிறது. அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணியும் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருக்கிறது. எதிர்வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிக அளவில் கொண்டாட உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது..

இதுதொடர்பாக தேசிய நோய் தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் அரோரா தெரிவிக்கும்போது இந்தியாவில் நோய்த்தொற்று தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் மக்கள் அதிகமாக கூடுகின்ற சமூக மற்றும் மத கூட்டங்களில் மூலமாக டெல்டா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதற்கான தன்மை கொண்டது. இது போன்ற சூழ்நிலைகளில், பொதுமக்கள் நோய்த்தடுப்பு வழிமுறைகளை முறையாகவும், நிச்சயமாகவும், பின்பற்ற வேண்டும் இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

தற்சமயம் நோய்தொற்று குறைந்து வருவதால் நம்முடைய நல்ல சூழ்நிலையில், நாம் இருந்து வருகிறோம் ஆனால் எதிர்வரும் சில வாரங்களில் பண்டிகை காலம் வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூடி முறையாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தவறினால் பெரிய அளவில் நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாடு இதே நிலையில், இருக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் தினங்களில் மிகவிரைவாக தடுப்பூசி பணிகள் மற்றும் நோய்த்தொற்று புதிய மாறுபாடு தோன்றாத சூழ்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மூவி தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது பொறுத்துதான் மூன்றாவது அலை இருக்கும் என கூறியிருக்கிறார்.