வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது!!

0
154
#image_title

வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது!

வருமானவரி கூடுதலாக செலுத்துவோர்களுக்கு 16 நாட்களில் கூடுதலாக செலுத்தும் தொகை திருப்பி அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த ‘சம்வாத்’ அமர்வில் சி.பி.டி.டி என்று அழைக்கப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா அவர்கள் கலந்து கொண்டு இது பற்றி பேசினார்.

அந்த சம்வாத் இணைய கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பேசிய பொழுது மத்திய நேரடி வரிகள் குழுத் தலைவர் நிதின் குப்தா அவர்கள் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகள் பின்வருமாறு;

* வருமான வரிக் கணக்குகளை பெற்று சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.

* வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்ப செலுத்துவதற்கான அவகாசம் கடந்த 2021-22ம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது. தற்பொழுது கூடுதல் தெகையை திரும்ப பெறுவதற்கான நாட்கள் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

* கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

* இந்த ஆண்டில் மார்ச் 31ம் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மூலம் 2480 கோடி ரூபாய் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

* கடந்த நிதி ஆண்டில் இறுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் நிறைவு அடைந்துள்ளது.

* 2021 – 2022 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2022 – 2023 ஆம் ஆண்டில் 60 சதவீத முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளது.

* முகமற்ற மதிப்பீடுகள் வழியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மேல் முறையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.