கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி!

0
70

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி

கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,மாவட்ட செயலாளருமான லட்சமணன் அதிமுகவிலிருந்து விலகி,அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து,பின் ஸ்டாலினிடம் உறுப்பினர் அட்டையும் பெற்றுக்கொண்டார் லட்சுமணன்.

உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த லட்சுமணன், செய்தியாளர்களிடம் பேசும் பொழுது வாய்த்தவறி மாண்புமிகு அண்ணன்
எடப்பாடியாரை தமிழக முதல்வர் ஆக்குவோமென்று கூறினார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் வசைபாட ஆரம்பிக்கவே,இதனை சுதாரித்துக்கொண்ட லட்சுமணன்,மு க ஸ்டாலின் முதல்வர் ஆக்குவோம் என்று சமாளித்து இருக்கின்றார்.கட்சியில் சேர்ந்த முதல் நாளே லட்சுமணனின் இந்த உளறல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இவர் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைதேர்தலின் போதே சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் லட்சமணன் இடையே கோஷ்டி அரசியல் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra