கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

0
790

மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடிப்பது போன்று சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும்.அதிலும் சிலருக்கு குணமாகி மீண்டும் சிறிது நாட்களிலேயே கண்கட்டி ஏற்பட்டுவிடும்.கண்கட்டி வந்தவர்கள் இதனால் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது.ஆனால் இது எதனால் வருகின்றது என்பது பலரும் அறிந்திருப்பது இல்லை.இந்த கட்டி எதனால் வருகின்றது?இந்தக் கட்டி வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?இந்தக் கட்டி வந்தால் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்?என்பதனை பற்றி காண்போம்.

கண்கட்டி ஏற்பட காரணம்?

இந்த கட்டிகளில் இரு வகை உண்டு.சிலருக்கு கண்ணின் மேல் பகுதியில் கண் கட்டி வரும்.சிலருக்கு கண்ணின் கீழ் இமையில் உட்பகுதியில் கண் கட்டி வரும்.

* காற்றில் பரவும் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கண்ணிமைகளில் தொற்றிக் கொள்வதால் கண்ணின் மேல் இமைகளில்,இந்த கண்கட்டி ஏற்படுகின்றது.

* கண் இமையின் உள்ளே இருக்கும் ஒருவகை எண்ணெய் சுரப்பினால் ஏற்படும் பாக்டீரியா தொற்று காரணமாக கண்ணினுள் கட்டி ஏற்படும்.

இதை தவிர்த்து நாம் உபயோகப்படுத்தும் கான்டாக்ட் லென்ஸ்,மற்றும் உடலில் வேறு பகுதியில் ஏற்படும் பாக்டீரியா தொற்றின் மூலம்,மூக்கில் ஏற்படும் சளி தொற்றின் மூலமும் பாக்டீரியாக்கள் கண்களுக்கு பரவி இந்த கண் கட்டி வருவதற்கு காரணமாகின்றது.

இது வருவதற்கான அறிகுறிகள்?

1.கண்களில் ஒரு வித அரிப்பு ஏற்படும்.

2. கண் இமைக்கும் போது கண்களில் ஒரு வித வலி ஏற்படும்.

3. வெள்ளை அல்லது சிவப்பு நிற கட்டி கண்களின் மடலில் உருவாகும்.

4. கண்களில் அடிக்கடி நீர் வடியும்.

5. சிலருக்கு கண்களில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டு வீக்கம் ஏற்படும்.சில நேரங்களில் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்கும்.

கண்கட்டிக்காண சிகிச்சை முறைகள்?

1.கைகளை சுத்தமாக கழுவிவிட்டு கட்டி ஏற்பட்ட கண்ணில் இரண்டு விரல்களை வைத்து லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.இதனால் கண்ணின் வீக்கம் மற்றும் வலி குறையும்.

2. எக்காரணத்தைக் கொண்டும் கண்களை தேய்க்கவும் அடிக்கடி தொடவோ கூடாது.

3.கண்ணின் மேல் பகுதியில் கட்டி உள்ளவர்கள் வெதுவெதுப்பான சுடுநீரில் ஒத்தடம் கொடுக்கலாம்.

4. மருத்துவரின் அறிவுரைப்படி ஆன்டிபயாடிக் கழும்புகள் மற்றும் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.

5. மருத்துவரை அணுக வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் ராமகட்டியை (நாமக்கட்டி) தண்ணீரில் தொட்டு நன்றாக உறைத்து கட்டியின் மீது ஏழு நாட்கள் தடவிவந்தால் கட்டிகள் தானாகவே உடைந்து சரியாகிவிடும்.

இந்தக் கட்டிகள் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை?

ஏற்கனவே கட்டி வந்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கட்டிகள் தானாக பழுத்து உடையும் வரை அல்லது தானாக அமுங்கும் வரை கட்டிகளை நாம் உடைத்து விடக் கூடாது. இதனால் பாக்டீரியாக்கள் கண்ணின் உள்ளே சென்று பலவித பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

மழைக்காலங்களில் தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பான தண்ணீரில் அடிக்கடி கண்கள் மற்றும் முகத்தை கழுவ வேண்டும்.

கையினை சுத்தம் படுத்தாமல் அடிக்கடி கண்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய மேக்கப் பொருளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது கண்கட்டி வருவதை தடுக்கும்.

கண்ணீருக்கு ஆபத்து தரக்கூடிய தேவையற்ற பொருட்களை கண் பரப்பினுள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

இந்த தடுப்பு முறைகளைப் பயன்படுத்தினாலே போதும் கண் கட்டி வந்தவர்களுக்கு கூட மீண்டும் அடிக்கடி ஏற்படும் கண் கட்டிகளை வராமல் தடுக்கலாம்.

author avatar
Pavithra