கல்லீரலில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்க.. 3 நாள் இந்த 1 டிரிங் போதும்!!

0
121
#image_title

கல்லீரலில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்க.. 3 நாள் இந்த 1 டிரிங் போதும்!!

நம் உடலில் உள்ள கல்லீரல் பல செயல்பாடுகளை நமக்கு செய்து தருகிறது. அவ்வாறு பல செயல்களை செய்து தரும் கல்லீரலில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க இந்த பதிவில் அருமையான மருத்துவ முறையை பார்க்கலாம்.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது. பித்த நீர் சுரப்பு, ஹீமோகுளோபின் அமைப்பு மாற்றம், உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுதல், சுரப்பிகளை செயல்பட வைத்தல், உடலில் ஏற்படும் காயங்களை ஆற வைத்தல், போன்ற பல செயல்பாடுகளை நம் உடலில் கல்லீரல் செய்கின்றது. அதிகமாக மது அருந்துதல், அதிகம் எண்ணெய் பலகாரங்கள் உண்ணுதல், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், நவீன டயட் முறை போன்ற காரணங்களால் கல்லீரல் பாதிப்பு அடைகின்றது.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்:

நம் உடலில் இருக்கும் கல்லீரல் பாதிப்படைந்தால் வரும் அறிகுறிகள் என்னவென்றால் வயிறு வீக்கம் அடைதல், உணவு நன்றாக செரிமானம் ஆகாமல் இருத்தல், கண்களை சுற்றி கருவளையம் தோன்றுதல், கண்கள் சோர்வாக இருத்தல், மஞ்சள் நிறத்தில் கண்களின் தோற்றம், வாய் துர்நாற்றம் இருத்தல், வாய் கசப்பு இருத்தல், சருமம் வெளுத்துப் போதல், அரிப்பு ஏற்படும், சிறுநீரின் நிறம் மாற்றம் இவை எல்லாம் கல்லீரல் பாதிப்பு அடைந்தால் நம் உடலுக்கு வரும் பிரச்சனைகளாகும்.

கல்லீரலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்தல்:

கல்லீரலை பாதிப்படையாமல் பாதுகாக்க இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த சாறு மட்டுமே போதும். கல்லீரல் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் எந்தவித பாதிப்பு இல்லாமலும் இருக்கும்.

தேவையான பொருள்கள்

* நெல்லிக்காய் – 4

* கற்றாழை – சிறிய துண்டு

* கொத்துமல்லி – தேவையான அளவு

* மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை அளவு

செய்முறை

நான்கு நெல்லிக்காய்களை எடுத்து கொட்டைகளை தனியாக எடுத்து வைத்துவிட்டு அந்த நெல்லிக் காய்களை சிறுசிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

எடுத்து வைத்துள்ள கற்றாழையில் இருந்து கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சி ஜாரில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல், நறுக்கிய நெல்லிக்காய், கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அரைத்து எடுத்துள்ள இந்த பானத்தை வடிகட்டி எடுத்து அதில் சிறிதளவு இந்து உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பானத்தை நன்கு கலக்கி எடுத்து குடிக்கலாம்.

இந்த பானத்தை காலையில் குடிக்கலாம். அதுவும் காலை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்தோ குடிக்கலாம். இந்த பானத்தை குடித்த பிறகு ஒரு மணி நேரம் எந்த பொருளையும் சாப்பிடக் கூடாது.

அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் இந்த மருந்து வேலை செய்யும்.

இந்த பானத்தை மூன்று நாள் தொடர்ந்து குடித்தால் போதும். இந்த பானத்தை அவ்வப்போது புதிதாக தயார் செய்து குடிக்க வேண்டும்.

இந்த மருந்தில் இருக்கும் பொருள்களின் பலன்கள்

நெல்லிக்காய் நம் உடலில் உள்ள கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. நெல்லிக்காய் நாம் உண்ட உணவை வேகமாக செரிக்க வைக்க உதவுகின்றது. நெல்லிக்காய் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நீக்கி படியாமல் பாதுகாக்கின்றது. அது மட்டுமில்லாமல் உடலில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கின்றது.

கற்றாழையில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் நிறைந்திருக்கின்றது. கற்றாழை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது. கற்றாழை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

கொத்துமல்லியானது நம் செரிமானத்தை வேகப்படுத்தி உண்ட உணவு ஜீரணிக்க உதுவுகின்றது. கொத்துமல்லியில் இருக்கும் கால்சியம், இரும்புச் சத்துக்கள் ஆகியவை இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் சேராமல் பாதுகாக்கின்றது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது தெரியும். மஞ்சளில் உள்ள குர்குவின் என்ற சத்து கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும் உதவுகின்றது.