மணல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

0
88

தமிழகத்தில் ஏழை, எளிய, பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுவது, அல்லது பழைய வீடுகளை பழுது நீக்குவது மற்றும் கட்டிடம் இல்லாத மற்ற பணிகளை எந்தவிதமான சிரமும் இல்லாமல் முன்னெடுப்பதற்கு இன்றியமையாத கட்டுமான பொருளாக ஆற்று மணல் இருக்கிறது. அவ்வாறான ஆற்றுமணல் எளிதில் பெறுவதற்காக எளிமையான வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வேலைகளை மறுபடியும் ஆரம்பிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வழங்கி இருக்கின்ற வழிகாட்டுதலை செயல்படுத்துவதிலும், பொதுமக்கள் ஏழை எளியோர் பயன்பெறும் விதத்தில் புதிய வழிமுறைகளை கடைபிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டிருக்கிறார்.

அதனடிப்படையில் எளிதாக இணைய வழியின் மூலமாக விலையை செலுத்தி எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மணலை எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு வழங்கியது போக மீதம் இருக்கின்ற மணல் பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில் இருப்பை பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் 16 லாரி வரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயங்குவதற்கு சுற்றுப்புற சூழல் தடையின்மை தரப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக தற்போதுள்ள தகவலின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதலுடன் மணல் விற்பனை எளிமையாக்க பட்டிருக்கிறது. அரசு மணல் கிடங்குகளில் கூடுதலாக செயல்பட இருக்கின்ற வங்கிகளின் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வசதியை தற்சமயம் நடைமுறையில் இருக்கின்ற இணையதள வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டை, வங்கி கடன் அட்டை மற்றும் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.