அரசு விழாவில் அரசியல் பேசலாமா! ஜெயக்குமார் அளித்த பதிலை கேட்டு ஆடிப்போன எதிர்கட்சிகள்!

0
69

அரசு விழாவில் அரசியல் பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்து இருக்கின்றார்.

சென்ற 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். அப்போது உரையாற்றிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

அரசு விழாவை அதிமுக மற்றும் பாஜக, கூட்டணி அறிவிப்பு விழா ஒன்று நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர். அதோடு அரசு விழாவிலேயே கூட்டணி அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்பு இருப்பதாகவும் சாடி இருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் இந்த விவகாரத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதுபோல இருக்கின்றது அவர்களுடைய குற்றச்சாட்டு. திமுக எத்தனையோ அரசு விழாக்களில் அரசியல் பேசி இருக்கின்றது. அரசின் நிகழ்ச்சி தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என்றார் அமைச்சர்.

அதோடு அரசியல் இல்லாமல் எந்த ஒரு விஷயமும் கிடையாது உலகம் , நாடு மாநிலம், மற்றும் மனிதர்கள் என்று நாம் அனைவரும் அரசியலை சார்ந்த தான் இருக்கின்றோம். எனவே அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசியது தவறு எதுவும் கிடையாது என்றும் விளக்கமளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.