முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

0
113

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்! 

பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். இன்றைக்கு பலரும் இதனால் அவஸ்தைப்படுவதுண்டு.

சிலருக்கு எப்போது பார்த்தாலும் முடி நிறைய கொட்டிக் கொண்டிருக்கும். சில பேருக்கு முடி இருந்தாலும் அடர்த்தியாக, நீளமாக இருக்காது. பொடுகு, அரிப்பு, இளநரை, போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு இருக்கும்.

இத்தகைய எல்லா பிரச்சினைக்கும் இந்த முறையை பயன்படுத்தி வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

1.  இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள் அரிசி கழுவிய நீர். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைய உள்ளன.  இது முடியை வலிமையாக்கும். மென்மையாக்கும். நீண்டு வளர உதவும்.

2. அடுத்த பொருள் வெந்தயம். வெந்தயத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளன. முடி வழுக்கையை தவிர்த்து மீண்டும் அடர்த்தியாக வளர உதவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் அரிசி கழுவிய நீரை ஊற்றவும். பிறகு அதில் 2 ஸ்பூன் வெந்தய பொடியை போடவும். நன்றாக கொதிந்து ஓரளவு கெட்டியாகும் பக்குவம் வரும் வரை கிளறவும். கெட்டியாக தொடங்கியதும் கீழே இறக்கி சிறிது ஆறவிடவும்.

ஓரளவு சூடு இருக்கும் பொழுதே இதை வடிகட்டிக் கொள்ளவும். இல்லையெனில் வடிகட்டுவது சிரமமாக இருக்கும். வடிகட்டிய விழுதை தூக்கி போட தேவையில்லை. இதைப் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் பளபளப்பும் நல்ல நிவாரணமும் கிடைக்கும்.

வடிகட்டிய அரிசி வெந்தய நீரில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். சளி பிடிக்கும் தொந்தரவு உள்ளவர்கள் விளக்கெண்ணைக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்.  பின்னர் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை கட் செய்து சேர்க்கவும்.

இதை நன்றாக கலந்து தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வர தலைமுடி பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தி வர தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது.