நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!

0
105

நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!

மற்ற இறைச்சிகளை போன்று மீன்களிலும் கெடாமல் இருக்க கெமிக்கல் பூசப்படுகின்றன.
மேலும் கடையில் விற்கப்படும் மீன்கள் பழையதா அல்லது புதிய மீன்களா என்பதனை அறியாமலே வாங்கி செல்கின்றன.வாங்க இந்த பதிவில் மீன்களை வாங்கும் பொழுது எதை எதை கவனித்து வாங்க வேண்டும் என்பதனை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

ஈ மொய்க்காத மீன்களை நாம் வாங்க கூடாது.இதற்கு முக்கிய காரணம் பிணத்தை பதப்படுத்தும் ஃபார்மலின் கெமிக்கல் மீனில் அடிக்கப்பட்டிருந்தால் ஈ மொய்க்காது.

மீனை அழுத்தி பார்க்கும் பொழுது விறைப்பாக இல்லாமல் ஒரு விதமான நுரநொரப்பு இருந்தால் அது கெட்டுப்போன மீன் என்று அர்த்தம்.

மீனின் செதிலை தொட்டு எடுத்து பார்த்தால் உங்கள் விரலில் சிவப்பு நிறம் ஒட்டி இருந்தால் அது கெமிக்கல் கலந்த பழைய மீன் என்று அர்த்தம்.

மீன்களின் கண்கள் கலங்கி இருந்தால் அது பழைய மீன் என்று அர்த்தம்.

எனவே மீன் வாங்க கடைக்குச் செல்லும் அனைவரும் மீன்களில் முக்கியமாக இதை கவனித்து வாங்குங்கள்.மேலும் ஈக்கள் மொய்க்காத மீனை எக்காரணத்தைக் கொண்டும் வாங்காதீர்கள்.

author avatar
Pavithra