வியாழக்கிழமை, மே 16, 2024
Home Breaking News இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

0
147
If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!
If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமராவார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
பாஜக கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தற்பொழுதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது.
பாஜக கட்சி மூன்றாவது முறையாக வெற்றியை பெற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக கட்சியின் வெற்றியை தடுக்கும் முனைப்பில் இந்தியா கூட்டணி செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் இருப்பதை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா கூட்டணி தலைவர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஏன் வருடத்திற்கு ஒரு பிரதமர் என்பதை கூட நாங்கள் செயல்படுத்துவோம் என்று கூறினர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கூறிய ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்பதை பாஜக கட்சியின் அமைச்சர் அமித்ஷா அவர்கள் விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் “இந்தியாவில் 30 ஆண்டுகள் நிலையான வலிமையான ஆட்சி அமையவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக  வலிமையான தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இந்தியாவில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இந்த வலிமையான ஆட்சியால் அரசியல் கொள்கைகளில் மட்டுமில்லாமல் வளர்ச்சித் திட்டங்களிலும் நிலையான தன்மை இருக்கின்றது. தற்பொழுது இந்தியா கூட்டணியின் தலைவர் ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டம் குறித்து பேசி வருகிறார்.
அதாவது முதலில் இந்திய பிரதமராக ஒரு வருடத்திற்கு சரத் பவார் அவர்கள் இருப்பார். அடுத்த ஒரு வருடம் மமதா பானர்ஜி அவர்கள் பிரதமராக பதவி வகிப்பாராம். அடுத்த ஒரு வருடம் பிரதமராக மு.க ஸ்டாலின் அவர்கள் இருப்பாராம். இறுதியாக இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி செயல்படுவாராம். ஒரு நல்ல நாடு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு இது தான் உதாரணம்” என்று பேசினார்.