இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

0
186
#image_title

இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

நம் வீடுகளில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது இந்த கொசுத் தெல்லை. சுற்றுபுறச் சூழல் காரணமாக இந்த கொசுப் பிரச்சனை இன்றளவில் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த கொசுக்கள் நமக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றது. இந்த நோய்கள் ஏற்படுவதை தடுக்க கொசுக்களை வராமால் பார்க்க வேண்டும். கொசுக்கள் அதிம் வராமல் தடுக்க சில இயற்கையான முறைகள் உள்ளது. என்னதான் நாம் கொசுக்களை விரட்ட மருந்துகள் பயன்படுத்தி இருந்தாலும் அதனால் நமக்கு அலர்ஜிதான் ஏற்படும். அதற்கு பதிலாக கொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

கொசுக்களை விரட்ட சில மூலிகை செடிகளை வீட்டில் நாம் வளர்க்க வேண்டும். இதனால் கொசுக்கள் வராமல் இருக்கும். மேலும் வீடும் நன்கு அழகாக இருக்கும்.

 

கொசுக்களை வராமல் தடுக்க என்னென்ன செடிகளை வளர்க்க வேண்டும்…

 

* பூண்டு செடி: பூண்டுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல் இந்த பூண்டுகளை ஒரு தொட்டியில் போட்டு வளர்க்க வேண்டும். இந்த செடியில் இருந்து வெளிவரும் அடர்த்தியான நறுமனத்தினால் கொசுக்கள் நம் வீட்டுக்குள் வராது.

 

* துளசி செடி: துளசி செடியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இதை சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக அளவு மருத்துவ குணங்கள் கிடைக்கின்றது. அது போல இந்த துளசி செடியை நம் வீட்டில் வைத்தால் கொசுக்கள் நம் வீட்டுக்குள் வராமல் இருக்கும்.

 

* புதினா செடி: புதினா செடி அனைவராலும் எளிமையாக வளர்க்க முடியும். புதினாவின் தண்டுகளை மண்ணில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் செடி வளர ஆரம்பிக்கும். புதினா செடியை வீட்டில் வைத்தால் இதில் உள்ள நறுமணம் கொசுக்கள் நம் வீட்டுக்குள் வரமுடியாமல் தடுக்கின்றது.

 

* லேவன்டர் செடி: ஊதா நிற பூக்களை கொண்ட இந்த லேவண்டர் செடியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த செடியை வீட்டில் வைத்து வளர்தால் இதில் இருக்கும் வாசனை காரணமாக கொசுக்கள் நம் வீட்டுக்குள் வராது.

 

* ரோஸ்மேரி செடி: இந்த ரோஸ்மேரி செடியில் அழகான பூக்கள் பூக்கும். நல்ல வாசனைகளும் உள்ளது. ரோஸ்மேரி செடியில் இருக்கும் இந்த வாசனையானது கொசுக்களின் எதிரி என்று கூறலாம். இந்த செடியை வீட்டில் வைத்தால் உறுதியாக வீட்டுக்குள் கொசுக்கள் வருவதை தடுக்கலாம்.

 

* சாமந்தி செடி: சாமந்தி செடியில் அழகான மலர்கள் பூக்கும். இந்த அழகான மலர்களில் வித்தியாசமான வாசனை இருக்கின்றது. இந்த வித்தியாசமான வாசனை கொசுக்களை நம் வீட்டுக்குள் வரவிடாது.

 

* கிராம்பு செடி: மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு மசாலா பொருள் கிராம்பு. இந்த கிராம்பில் இருக்கும் வாசனை கொசுக்களுக்கு ஆகவே ஆகாது. எனவே கிராம்பு செடியையும் நம் வீட்டில் வளர்த்து வந்தால் கொசுக்கள் நம் வீட்டுக்குள் வரவே வராது.