2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!!

0
116
The 93rd Oscar Awards Ceremony for the year 2021 was a resounding success !!
The 93rd Oscar Awards Ceremony for the year 2021 was a resounding success !!

2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!!

93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 இரவு 8 மணி, இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 மணிக்கு 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா டால்பி அரங்கத்தில் நடைபெறற்றது. 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி மூன்று பிரிவுகளில், இவ்விருது வழங்கப்பட்டது. 93 ஆவது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் மார்ச் 15, 2021 அன்று அறிவிக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றினால் இரண்டு மாதங்கள் தாமதமாக வழங்கப்பட்டது.

கொரோனா பதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, விழா நடைபெறும் அரங்கிற்க்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வருடம் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு: சிறந்த மூல திரைக்கதை விருது – ப்ராமிஸிங் யங் வுமன்-க்கும், சிறந்த தழுவல் கதை விருது – தி ஃபாதர்-க்கும், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருது – அனதர் ரவுண்ட்-க்கும், சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லுயா-க்கும், சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது  – செர்கியோ லோபெஸ்-க்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது – ஆன் ரோத்-க்கும், சிறந்த இயக்குனர் விருது – சோலி ஜாவோ-க்கும், சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்-க்கும், சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருது – டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்-க்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ-க்கும், சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது – சோல்-க்கும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது – கோலெட்-க்கும், சிறந்த ஆவண படத்திற்கான விருது – மை ஆக்டோபஸ் டீச்சர்-க்கும், சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ்க்கான விருது – டெனெட்-க்கும், சிறந்த துணை நடிகை விருது – யூன் யூ ஜங்-க்கும், சிறந்த தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்கான விருது – டொனல்ட் கிரஹம் பர்ட்-க்கும், சிறந்த செட் அலங்காரத்திற்கான விருது – ஜான் பாஸ்கலடூபிள் டாகர்-க்கும், சிறந்த ஒளிப்பதிவிற்க்கான விருது – எரிக் மெஸ்செர்மிட்-க்கும், சிறந்த எடிட்டிங்கான விருது – மைக்கேல் ஈ.ஜி.நெல்சன்-க்கும், மனிதாபிமான விருது – டைலர் பெர்ரி-க்கும், சிறந்த மூல இசை விருது – சோல்-க்கும், சிறந்த மூல பாடலுக்கான விருது – ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா-க்கும், சிறந்த படத்திற்கான விருது – நோமட்லேண்ட்-க்கும், சிறந்த நடிகை விருது – பிரான்சிஸ் மெக்டார்மண்ட்-க்கும் மற்றும் சிறந்த நடிகர் விருது – ஆன்டனி ஹாப்கின்ஸ்-க்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

author avatar
CineDesk