சீனாவில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழப்புகள் அதிகரித்த அவலம்!

0
114
Increased death toll from damage in China
Increased death toll from damage in China

சீனாவில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழப்புகள் அதிகரித்த அவலம்!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு குறிப்பிட்ட 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக ஜென்சூ நகரமே வெள்ளத்தில் மிதக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சளாறு மற்றும் ஹைஹே நதிகள் மற்றும் அவற்றின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகளாக மாறிவிட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மக்களின் கழுத்தளவு நீர் செல்வதனால் மக்கள் மிகவும் திண்டாட்டப்பட்டனர்.

வானிலை மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 3 நாட்களில் மட்டும் 640 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நகரில் அதிகரித்துவரும் வெள்ளத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் சொல்லப்படுகின்றன.

மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சீன நகரின் பிரதான போக்குவரத்து சேவைகளான மெட்ரோ ரயில்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வழக்கமான அளவை காட்டிலும் ஐந்து சென்டி மீட்டர் முதல் 25 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் மிக அதிக அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மீட்கும் சமயத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.