2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

0
68

இந்தியா, தென்ஆப்பிரிக்கா ,அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை சேர்த்திருக்கிறது.

முதுகு வலியின் காரணமாக, விராட் கோலி இந்த போட்டியில் பங்கேற்கவில்லை இந்த நிலையில் லோகேஷ் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், ஜோடி நிதானமாக விளையாடியது இதனை தொடர்ந்து மயங்க் அகர்வால் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வந்த ரஹானே ரன் எதுவும் எடுக்காமலும், விகாரி 2 ரங்களிலும், ராகுல் 50 ரன்களிலும், ரிஷப் பண்ட் 17 ரன்களிலும், ஆட்டம் அதன்பிறகு களமிறங்கிய அஸ்வின் நிதானமாக விளையாடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகமது ஷமி 9 பும்ரா 14 சிராஜ் 1 உள்ளிட்ட ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்தியா 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்., ரபாடா மற்றும் ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மார்க்கம் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து இருக்கிறது. கேப்டன் டீன் எல்கர் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும், களத்தில் இருக்கிறார்கள்.

இந்திய அணியின் சார்பாக முகமது ஷமி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா அணி 167 ரன்கள் பின்தங்கி இருக்கின்ற சூழ்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.