இந்தியாவின் இன்றைய நோய்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நிலவரம்!

0
71

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய அரசு.மேலும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் மத்திய அரசு மிக தீவிரமாக இறங்கி ஆராய்ச்சி செய்து வந்தது அதன் பலனாக தடுப்பூசி உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு தொடக்கத்தில் செலுத்திய போது பொதுமக்கள் அதனை ஒருவித அச்சத்துடனே எதிர்கொண்டார்கள்.ஆனாலும் இன்று மத்திய மாநில அரசுகளின் தீவிர பிரச்சாரம் காரணமாக, பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருந்த தயக்கம் விலகி எல்லோரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தொடங்கினார்கள்.

தகுதியுடைய அனைவரும் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பிரச்சாரம் செய்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வந்தனர் இதனால் பல கோடி நபர்கள் தடுப்பூசிகள் செலுத்துகிறார்கள்.இந்த தடுப்பூசியின் விளைவு காரணமாக, இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது அதனடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1778 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1581 விட சற்று கூடுதலாகும்.

இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,30,12,749 என அதிகரித்திருக்கிறது.சென்ற 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2542 பேர் பூரண நலம் பெற்றிருக்கிறார்கள். அதேபோல நாட்டில் நோய் தொற்றுகளிலிருந்து குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,73,057 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 23,087 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், ஆனால் நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனால் நாட்டில் நோய் தொற்றால் உயிரிழந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,16,605 என்று அதிகரித்திருக்கிறது.

அதேசமயத்தில் நாடுமுழுவதும் இதுவரையில் 181,89,15,234 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.