இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மக்கள்!

0
85

நாட்டில் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மிகத் தீவிரமாக எல்லோருக்கும் செலுத்தப்பட்ட காரணத்தால், நோய்தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர், இருந்தாலும் இந்த நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து உருமாற்றமடைந்து பொதுமக்களிடையே வேகமாக பரவி வந்தது.

ஆகவே தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் மீண்டும் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது.

அதாவது நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 3,000க்கும் கீழே இருந்தது. ஆனால் நேற்று மறுபடியும் இந்த நோய்த்தொற்று பரவல் 3,000த்தை கடந்து விட்டது.ஆனாலும் இதன் காரணமாக, நேற்று 3,205 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில், இன்று புதிதாக 3, 275 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,275 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,91,393 என அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்தொற்று பாதிப்புக்கு ஒரேநாளில் 55 பேர் பலியாகி இருக்கிறார்கள் இதன் மூலமாக நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,23,975 என அதிகரித்திருக்கிறது .

கடந்த 24 மணி நேரத்தில் நோய்தொற்று பாதிப்பிலிருந்து 3010 பேர் விடுபட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,47,699 என அதிகரித்திருக்கிறது.

அத்துடன் நோய் தொற்றுக்கு தற்போது வரையில் 19,719 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 1,89,63,30,362 பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு நடுவே நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 4,23,430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் 83,93,79,007 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.