பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

0
227

ஃபேஸ்புக் தளத்தில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கமளிக்க உள்ளது.

 

சமீபகாலமாக சமூகவளைத்தளமான பேஸ்புக்கில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அந்தவகையில், பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும், இந்திய அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்,

 

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கட்டுரை இந்தியா முழுவதும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

 

பேஸ்புக்கின் பாஜக ஆதரவு நிலைப்பாடு புகார் குறித்து நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து பேஸ்புக் நிர்வாகிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

பேஸ்புக் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு,

 

வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் வெளியிட்ட கட்டுரையின் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவும் நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதற்கிடையே முன்னதாக பேஸ்புக் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி செய்யப்படுவதாக அதன் இயக்குநர் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!
Next articleபிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here