நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெகதீப் தங்கர்! பதவிப்பிரமாணம் செய்து வைத்தது யார் தெரியுமா?

0
66

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது.

இதில் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜகதீப் தங்கர் போட்டிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரேட் ஆல்வா போட்டிட்டார்.

இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தார்கள், இதில் பாஜகவின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் 528 வாக்குகளையும், மார்கரேட் ஆல்வா 182 வாக்குகளையும், பெற்றனர். இதனால் ஜகதீப் தங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஜெகதீப் தங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, போன்ற அனைத்து கட்சிகளையும் சார்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார். ஜெகதீப் தங்கருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.