அமெரிக்க அதிபராக முதல் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

0
89

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ.பிடன் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 10 20 க்கு பதவியேற்றுக்கொண்டார். அதற்கு முன்பாக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரையில் எந்த ஒரு பெண்ணும் துணை அதிபராகவோ,அதிபராகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட கிடையாது என்று தெரிவிக்கிறார்கள். சென்ற முறை கூட இதே ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். அந்த சமயத்தில் அமெரிக்காவின் ஊடகங்களும், மற்றும் உலக ஊடகங்கள் அனைத்தும் உலகத்தின் சர்வ வல்லமை பெற்ற ஒரு நாட்டினை ஒரு பெண் வழி நடத்த இயலாது என்பதை அமெரிக்க மக்கள் நிரூபித்து விட்டார்கள் என்பது போன்ற வாசகங்களை எழுதியிருந்தார்கள்.

அதனையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ,இப்பொழுது ஒரு பெண் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுவும் இந்திய வம்சாவளி பெண் அதில் மேலும் சிறப்பாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலாதேவி ஹாரிஸ் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, சக்தி வாய்ந்த நாடுமாகிய அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்று இருப்பது இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் அவர்களும் பதவியேற்றதை அடுத்து இருவரும் தம்முடைய துணைவர்கள் உடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அந்த சமயத்தில் அமெரிக்க ராணுவத்தால் இசை முழக்கம் எழுப்பப்பட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அறையிலிருந்து ஜோ பைடன் தன்னுடைய அமைச்சரவை நியமனங்கள் ,மற்றும் சில பரிந்துரைகளை துணை அமைச்சரவை சகாக்களுக்கு முறைப்படுத்தி இருக்கிறார். பதவி ஏற்றதற்கு உரிய ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் தன்னுடைய வேலைகளை அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஆரம்பித்தார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற சில நிமிடங்களில் தன்னுடைய பதவிக் காலத்தின் முதல் அரசு ஆவணங்களில் அமெரிக்க அதிபராக தன்னுடைய கையெழுத்தைப் போட்டார் ஜோ பைடன்.

அந்த சமயத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மறுபடியும் இணையும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். இது குறித்த சில நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்து போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் இருக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கார்பன் புகைகள் காரணமாக பூமி வெப்பமடையும் தன்மை அதிகரித்து இருக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐநா சபையின் முயற்சியால் பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது .இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்க அரசு பிறகு விலகிக்கொண்டது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற உடன் ஜோ பைடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்.