தெரிந்து கொள்ளுங்கள்.. வேப்ப இலையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!!

0
45
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. வேப்ப இலையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!!

உணவில் இனிப்பு,கசப்பு,காரம்,உவர்ப்பு,துவர்ப்பு,புளிப்பு என்று அறுசுவைகள் இருக்கிறது.இதில் கசப்பு உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவையாக இருக்கிறது.அந்த வகையில் கசப்பு சத்து நிறைந்த அதிக மருத்துவ குணம் கொண்டவைகளில் ஒன்று வேப்ப இலை.இவை நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கிறது.வேப்ப இலை மட்டும் அல்ல வேப்ப மரத்தின் காய்,வேர்,தண்டு,பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

வேப்ப இலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்:-

*வெறும் வயிற்றில் 10 வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*வேப்ப இலையை ஜூஸ் செய்து பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

*நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேப்ப இலை ஜூஸ் பருகுவது நல்லது.

*செரிமான கோளாறால் அவைதிப்படும் நபர்கள் வெறும் வேப்ப இலையை மென்று சாப்பிட்டு வாருங்கள் அந்த பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.

*குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.இந்த குடலில் உள்ள தேவையற்ற கழிவுகள்,புழுக்கள் வெளியேற வெறும் வயிற்றில் 1/4 கைப்பிடி அளவு வேப்ப இலை சாப்பிடுவது நல்லது.

*வேப்ப இலை கூந்தல் பராமரிப்பிற்கும் சிறந்த ஒன்றாக இருக்கிறது.பொடுகு,பேன் தொல்லை,தலையில் அரிப்பு இருப்பவர்கள் ஒரு கைப்படி அளவு வேப்பிலை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக்கி கொள்ளவும்.பின்னர் அதை தலைக்கு உபயோகித்து குளித்து வருவதன் மூலம் கூந்தல் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.

*பல் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலை சிறந்த தீர்வாக இருக்கிறது.அதேபோல் நீரிழுவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் வேப்ப இலையை சாப்பிட்டு வர அந்த பாதிப்பு விரைவில் சரியாகத் தொடங்கும்.