மேட்டூர் அணைக்கு குறைந்த நீர் வரத்து!

0
72

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் கடந்த 13ஆம் தேதி இரவு மேட்டூர் அணை தன்னுடைய முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது அன்றுமுதல் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது
.

அந்த விதத்தில், மேட்டூர் அணையில் இருந்து சென்ற சில தினங்களாக வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அளவு குறைந்து தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்திருக்கிறது. நேற்றையதினம் அணைக்கான நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், இன்றைய நிலவரத்தின் அடிப்படையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது அதேநேரம் அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் தற்சமயம் 91.63 டிஎம்சி அளவு தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில், தற்சமயம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.10 அடியாக நீடித்து வருகிறது.