மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!

0
316

சனீஸ்வர பகவானுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மாந்தி இன்னொருவர் குளிகன் இதில் குளிகன் சனி பகவானுக்கும், நீலாதேவிக்கும், பிறந்தவர் ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலிலிருந்து உருவானவர் என்று சொல்லப்படுகிறது.வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்திற்கு சமம் என தெரிகிறது. ஆகவே சவ ஊர்வலம் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முடிந்த வரையில் உதவிகளை செய்வதும், ஆண்டியின் தோஷத்தை வெகுவாக குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த தோஷம் இல்லாமல் போய்விடும் என்று தெரிவிக்கிறார்கள்.

கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநறையூர் என்ற தளத்தில் சனி பகவான் தனி சன்னதியில் இருக்கிறார். அத்துடன் தன்னுடைய மனைவி நீளாதேவி மகன்களிடம் மற்றும் மாந்தி என குடும்பத்துடன் அருள்பாலித்து வருகின்றார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

பஞ்ச சபைகளில் ஒருவரான திருவாலங்காடு ஆலயம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது இந்த தளத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் இருக்கிறது அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபடும் மாந்தி தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.பட்டுக்கோட்டைக்கு அருகே விளங்குளம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கின்ற சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்துடன் அருள்பாலித்து வருகின்றார். அங்கே சென்று அவர்களை வழிப்படடாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த வரையில் உதவி செய்ய வேண்டும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து இந்த தோஷத்தின் வீரியத்தை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலமாக புத்திர பாக்கியம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

குடும்பத்தில் அமைதி இல்லாமல் நிம்மதியற்ற நிலை மற்றும் போதுமான வருமானம் இல்லாமல் இருப்பவர்கள், குடும்பத்தின் ஆளுக்கு ஒரு பக்கமாக பணிபுரிந்து கொண்டு சேர்ந்து வாழ இயலாமல் தவிப்பவர்கள் மேற்சொன்ன பரிகாரங்களை செய்தால் மிகப்பெரிய பலன்களை பெறலாம். பிரச்சனைகள் விரைவாக தீரும் தொடர்ச்சியாக சிவபெருமானை வழிபாடு செய்ததும், நாள்தோறும் காலையில் சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின் வீரியத்தை குறைக்கும்.