அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ” பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!!

0
25
#image_title

அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ” பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!!

மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் ஒன்று ‘மெட்ராஸ் ஐ’.இவை ‘அடினோ’ என்று சொல்லப்படும் ஒரு வகை வைரஸால் உருவாகிறது.இந்த மெட்ராஸ் ஐ ஒரு வகை கண் நோய் ஆகும்.இதை ‘பிங்க் ஐ’ என்று கூறுவார்கள்.இந்த கண் நோய் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க கூடியவை.

நம்மில் பெரும்பாலானோர் நினைத்து கொண்டிருக்கிறோம் மெட்ராஸ் ஐ பாதித்த ஒருவரை பார்த்தாலே நமக்கு அந்த பாதிப்பு வந்துவிடும் என்று.ஆனால் நாம் நினைப்பது மிகவும் தவறு.

மெட்ராஸ் ஐ இருப்பவர்கள் பார்த்தால் இந்த நோய் பரவாது.பாதிக்கப்பட்டவர் அவரது கண்களை தொட்டுவிட்டு ஒரு இடத்தில் கைகளை வைக்கும் பொழுது அந்த இடத்தை மற்றவர்கள் தொடுவதினால் மட்டுமே பரவும்.இந்த ஒரு காரணத்தினால் தான் மெட்ராஸ் ஐ பாதித்தவர்களை கண்ணாடிப் போடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ அறிகுறிகள்:-

*கண்கள் சிவத்தல் மற்றும் நமைச்சல்

*கண்களில் இருந்து நீர் வடிதல்

*அதிகளவு கண் எரிச்சல்

*கண் இமைகளில் வீக்கம்

*கண் மங்கலாகத் தொடங்குதல்

*கண் உறுத்தல்

*கண் பூழை அதிகளவில் உருவாகுதல்

*கண்களில் அதிகளவு நீர் வடிதல்

*அதிகப்படியாக கண் கூசுதல்

மெட்ராஸ் ஐ பாதித்தவர்களுக்கு அந்த பாதிப்பு முழுமையாக குணமடைய 1 மாதம் வரை எடுத்து கொள்ளும் என்பதினால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து முடிந்தவரை தனியாக இருப்பது நல்லது.அதேபோல் கண்களை தேய்த்து விட்டு அருகில் இருக்கும் நபர்களை கைகளால் தொடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வழிகள்:-

*அவ்வப்போது கைகளை சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும்.

*உடன் இருப்பவர்கள் உடைமைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

*கண் பாதுகாப்பிற்காக கண்ணாடி அணிவது அவசியம்.

*பொது இடங்களில் உள்ள பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.பொது இடங்களுக்கு செல்லும் பொழுது சானிடைசர் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.

*ஒருவரிடம் பேசும் பொழுது இடைவெளி விட்டு நின்று பேசுங்கள்.

*நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துங்கள்.

மெட்ராஸ் ஐ வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் கால தாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி அவரின் அறிவுரைப்படி அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்.மருத்துவரே உரிய சிகிச்சை மற்றும் நோய் பாதிப்பு குணமாக மருந்து வழங்குவார்.அந்த மருந்தைத் தான் கண் நோய் பாதித்த நபர்கள் பயன்படுத்த வேண்டும்.

அதை விடுத்து நீங்களாவே மருந்தகங்களில் உள்ள ஏதேனும் ஒரு கண் மருந்தை வாங்கி பயன்படுத்த கூடாது.இவ்வாறு செய்தால் கண்களுக்கும்,உடலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் 3 முதல் 4 வாரங்களில் முழுமையாக சரியாகிவிடும்.