கணவன் மனைவி பிரச்சனை தீர அம்மனை இதனைக்கொண்டு வழிபடுங்கள்!!

0
84

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாகும்.ஆடி மாதத்தில் ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய மூன்று தினங்களும் அம்மனை வழிபட மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.ஆனால் இந்த மூன்று நாட்களும் வழிபடும் முறை வேறு வேறு.ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆடிவெள்ளி என்று செய்யவேண்டிய பூஜைகளையும் பற்றி நம் முந்தைய பதவியில் பார்த்தோம்.தற்போது ஆடி செவ்வாயன்று நாம் எவ்வாறு அம்மனை வழிபட வேண்டும் என்பதனை பற்றி இதில் காண்போம்.

https://bit.ly/39hjpFL
https://bit.ly/3hlmJmh
https://bit.ly/2OJibtO

ஆடி செவ்வாய் அன்று அம்மனை வழிபடும் முறை:

ஆடி செவ்வாயன்று அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு (எந்த அம்மனாக இருந்தாலும் சரி)சென்று அம்பாளுக்கு உகந்த அரளிப்பூ மாலை சாற்றி எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வழிபடலாம்.

இல்லையென்றால் அம்மனுக்கு மிக மிக உகந்த மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்ட வேண்டும்.

மாவிளக்கை மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து அலங்காரம் செய்து பின்பு அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி அல்லது வாழை திரி போட்டு அம்மனை மனதார வழிபட்டு வந்தோம் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் நிலைத்திருக்கும்.

மாவிளக்கு செய்வது எப்படி?

பச்சரிசியை ஊறவைத்து பின்பு கழுவி அதனை சிறிதளவு உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் சர்க்கரைப்பாகு அல்லது சர்க்கரையுடன் நெய் சேர்த்து நன்றாக பிசைந்து விளக்கு வடிவத்தில் செய்ய வேண்டும்.

author avatar
Pavithra