ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு பிஸியான இசையமைப்பாளர் ஜுபின்.!!

0
250

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் மேனன், தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு ஜுபின் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் இவரது இசை மிகவும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு சிறுவயதிலிருந்தே இசையில் மிகவும் ஆர்வம் என்றும், தன்னுடைய ஆறு வயதிலேயே பியானோ கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் உடைய குருவான ஜேக்கப் ஜான் என்பவர் தான் எனது முதல் குரு எனவும், ஜி.வி. பிரகாஷின் குருவான தாஸ் டேனியல் என்பவர் தான் எனது இரண்டாவது குரு. எனது வழிகாட்டி குருவால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றும், விண்மீன்கள் படம் தான் எனது முதல் படம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இயக்குனர் மோகன்.ஜி உடன் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் என தொடர்ந்து மூன்று படங்களுக்கு பணியாற்றியுள்ளேன். ருத்ர தாண்டவம் படத்திற்கு இசையமைத்தது மிகவும் சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியான அன்று மாலையே புதிய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறியுள்ளார். அது என் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன் என்றும் தீபாவளி முடிந்த பிறகு அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று படங்களுக்கு இசை அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleBREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது!
Next articleகண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here