நடிகர் சங்கத் தேர்தல் தேவையில்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
48

சென்ற 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது கடந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. என்றும் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக, பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்று கொள்ள முடியவில்லை என்று நடிகர் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் தேர்தலுக்கு தடை விதிப்பது குறித்து விசாரணை செய்து வந்தது. அதன் பின்னர் காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்னையில் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்திருந்தது.

இந்தத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர்கள் மேலும் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கின் தேர்தல் நடத்துவது செல்லாது எனவும், மறுபடியும் நடிகர் சங்க உறுப்பினர்கள் கொண்ட வாக்காளர் பட்டியலை தயாரித்து 3 மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் எனவும், அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக நடிகர்சங்கம் சார்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதற்காக ஒரு நிர்வாகி நியமனம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து நடிகர் சங்கத்தை சார்ந்த நடிகர் விஷால், கார்த்தி, உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது என தெரிகிறது.

இவ்வாறு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் தற்சமயம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதாவது நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் மறு தேர்தல் நடத்துவதற்கான தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதோடு ஏற்கனவே பதிவாகி பேங்க் லாக்கரில் வைக்கப்பட்டிருக்கின்ற வாக்குகளை 4 வாரத்தில் எண்ணி முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.