மக்களே உஷார்! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்!

0
89

வரும் 24ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 22-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது 24ஆம் தேதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் சின்னம் ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்க கடலில் உருவாகும் புயல் உதாரணமாக, 22ஆம் தேதிக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதற்கிடையில் அந்தமான் பகுதியை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.