இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
101
#image_title

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு எந்த ஒரு தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.போராட்டத்திற்கு முக்கிய காரணமாக கூட்டுறவுத்துறை ரேசன் கடைகள் ,வருவாய்த்துறை நிர்வாகத்தாலும், டிஎன்சிஎஸ்  நிர்வாகத்தாலும்  சேர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது  இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக ரேசன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ரேசன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் கீழ்  ஒரே துறை நிர்வாகத்தின் மூலம் கொண்டு வர வேண்டும் மற்றும் தமிழக அரசு, ரேசன் கடை தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை குறைக்க வேண்டும் மேலும் பொருட்களின் எடையை பொட்டலமாக சரியான எடையில் வழங்க வேண்டும் என ரேசன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர் .

மேலும் புதிய 4ஜி விற்பனை முனையம் அமைத்து 4ஜி சிம் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் பொருட்களின் அளவு,விலை மற்றும் கூடுதல் தொகைக்கான ரசீது வழங்க வேண்டும் போன்ற பல்வேறு  21 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம்   தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சங்கம் சார்பில் கள்ளகுறிச்சியில்  நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவில்  வரும்  ஜூன்  14 தேதி முதல் மாநிலம் முழுவதும்  காலைவரையற்ற ஸ்டிரைக் அறிவித்துள்ளது.  இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

author avatar
Parthipan K