பணம் எடுக்க இனி ஏடிஎம்-யிருக்கு செல்லத் தேவையில்லை:! உங்கள் வீடு தேடி ஏடிஎம் வரும்!

0
93

பணம் எடுக்க இனி
ஏடிஎம்-யிருக்கு செல்லத் தேவையில்லை:! உங்கள் வீடு தேடி ஏடிஎம் வரும்!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ,இனி வாட்ஸ் அப் மூலம் வீட்டிற்கே ஏடிஎம் இயந்திரங்களை வர வைக்கலாம்.

இந்த சேவையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தங்களது வாடிக்கையளர்களுக்கு வழங்குகிறது. ஒரு வாட்ஸ்அப் செய்தியின் உதவியுடன் உங்கள் வீட்டு வாசலில் உள்ள ATM இயந்திரத்தை அழைக்கலாம்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க ஏடிஎம் சென்டருக்கு செல்ல இனி தேவையில்லை. இதற்கு பதிலாக ஏடிஎம் இயந்திரங்கள் உங்கள் வீட்டிற்கு பணம் செலுத்த வரும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் செய்திகளுடன் உங்கள் வீட்டு வாசலில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை அழைக்கலாம்.

https://twitter.com/AjayKhannaSBI/status/1295397055104348172?s=19

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் பேரில் ‘உங்கள் வீட்டு வாசலில் ATM-களை’ அறிமுகப்படுத்தியுள்ளது.செய்தியை அனுப்பியதும் ஏடிஎம் இயந்திர வாகனம் உங்கள் வீட்டில் முன் கொண்டு வரும் என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. மொபைல் ATM வீட்டிற்கு அழைக்க வங்கியை அழைக்கலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கி இந்த சிறப்பான செயலை லக்னோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு SMS கட்டணம் மற்றும் குறைந்தபட்ச கட்டணங்களுக்கு பணம் பிடிக்க மாட்டோம் என்று SBI கூறியது.மேலும் ஒரு மகிழ்ச்சியாக இந்த புதிய சேவையை  44 கோடிக்கும் அதிகமான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி உள்ளது.

author avatar
Parthipan K