உலக நாடுகளின் பணத்தை கொள்ளையடிக்கும் வடகொரியா! ஐ.நா. சபை கடுமையான குற்றச்சாட்டு!

0
76

ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீறும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிர வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளின் எதிரொலியின் காரணமாக, வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்த போதும் கூட அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவேயிருக்கிறது என தெரிவிக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில், வடகொரியா பல நாடுகளின் நிதி நிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள், போன்றவற்றின் மீது சைபர் தாக்குதலால் கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதனை கொண்டு ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடகொரியாவை சார்ந்த ஹேக்கர்கள் 2020 ஆம் வருடம் தொடக்கத்திலிருந்து சென்ற வருடம் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3 கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்களிலிருந்து, 50 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 373 கோடி வரையில் திருடியிருக்கிறார்கள்.

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் நிறுவனங்கள் வடகொரியாவில் குறிவைக்கப் படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.