இன்னும் 2 வாரங்களில் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
111

கடந்த மே மாதம் 29ஆம் தேதி ஆரம்பமான தென்மேற்கு பருவமழை இந்த வருடம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து இந்த மாதம் நான்காம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை வட மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் கடலூர் மாவட்டங்கள் உள்ளூர் மாவட்டங்கள் என்று தமிழகத்தில் தீவிரம் காட்டும் என்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரைவிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை 106 சதவீதம் பெய்துள்ளது. இயல்பு அளவான 87 சென்டிமீட்டருக்கு பதிலாக 92.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 122% மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 101 சதவீதமும், வடகிழக்கு மாநிலங்களில் 82 சதவீதமும், மத்திய மாநிலங்களில் 119 சதவீதமும் மழை பதிவாகியுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் உள்ளிட்ட மாதங்களில் முறையே 92, 117, 104 மற்றும் 108 சதவீதமாக மழை பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.