தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

0
68

இரு வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் சுமார் 55 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது. கடந்த 18ஆம் தேதி ராமநாதபுரம் ராமேஸ்வரத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் சுமார் 570 படகுகளில் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள். அன்றைய தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 மீனவர்கள் உள்ளிட்டோரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் 6 படகுகளையு,ம் பறிமுதல் செய்து இருக்கிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்திற்குள் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருப்பதோடு அவர்களுடைய இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தமிழக அரசின் செவிக்கு வந்தவுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு உடனடியாக கடிதம் ஒன்றை இதுதொடர்பாக எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையின் உள்நோக்கம் மீனவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களுடைய பாரம்பரிய பகுதியில் மீன் பிடிப்பதை தடுப்பது தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்ற 55 தமிழக மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும், உடனடியாக இலங்கை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு பன்னீர்செல்வம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நேரடியாக கவனம் செலுத்தி சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் உடைமைகளை அவர்களிடம் ஒப்படைக்கவும், இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்கவும், போதுமான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.