நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் பகுதி! 14ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்!

0
105

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து வருடாந்திர மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் மார்ச் மாதத்தில்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படும் ஆனால் தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த வழக்கத்தை மாற்றி பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த ஆரம்பித்தது.

அதன்படி இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. கடந்த மாதம் 1ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையின் கூட்டத்தொடரின் முதலாவது பகுதியில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. முதலாவது பகுதி கடந்த மாதம் 16ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இவ்வாறான சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கையின் கூட்டத்தொடரின் 2வது பகுதி வருகின்ற 14ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதில் மக்களவை, மாநிலங்களவையும், காலை 11 மணி முதல் ஒரே சமயத்தில் செயல்படும் 2 அவைகளின் உறுப்பினர்களும் முன்பை போலவே அந்தந்த அவைகளில் கேலரிகள் அறைகளை பயன்படுத்துவார்கள்.

மாநிலங்களவை தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும், நேற்று சந்தித்து உறுப்பினர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசித்தார்கள் என்று தெரிகிறது. பொதுச்செயலாளர்கள் நாட்டில் நோய்த்தொற்றின் 3வது அலையின் போது குறைந்த நோய் தொற்று எண்ணிக்கை தொடர்பாகவும். விரிவான தடுப்பூசி ஏற்பாடுகள் தொடர்பாகவும், விவாதித்ததாக தெரிகிறது.