ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு! பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

0
120

நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் 10ம் தேதி வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் விதத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளராக பங்கு பெறும் நிகழ்ச்சி.

ஆகவே திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டு போட்டியையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் இந்த வருடத்திலும் தற்போது நோய்த்தொற்று காரணமாக, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் அவர்களை சார்ந்தவர்களாக 5 மற்றும் 6 பேர் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்த காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காலை உடன் நன்றாக பழகி இருக்கின்ற ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளையின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. காளைகளை பதிவு செய்யும்போது உரிமையாளர் மற்றும் உதவியாளரும் பதிவு செய்ய வேண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு பதிவு செய்தல் முடிக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு, நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300க்கும் மிகாமல் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்று நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் வீரர்களும், நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அடையாள அட்டையும் தர வேண்டும். அது இல்லாவிட்டால் வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை, வீரர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடைமுறைகளை பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும் திறந்தவெளி அரங்கத்தில் அதன் அளவிற்கு ஏற்றவாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதத்தில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களாக வேடிக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையாளர்களும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளியூர் மக்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் இணையதள வாயிலாக கான அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு விதிமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகளுடன் அரசின் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.