அதிநவீன முறையில் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷ்யா? பீதியில் மேற்கத்திய நாடுகள்!

0
199

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே 70 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. பல நகரங்களில் முற்றுகையிட்டிருக்கின்ற ரஷ்ய படைகள் ஒவ்வொரு பகுதியாக பிடித்துவருகிறது.

உக்ரைன் மக்கள் பலரும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு ரஷ்யா, உக்ரைன் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நிறுவ முயற்சி செய்து வருவதாகவும் ,உக்ரைன் அரசு குற்றம் சாட்டியிருக்கிறது.

அதேநேரம் உக்ரைனும் தொடர்ந்து ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவி காரணமாக, உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து ரஷ்ய வீரர்களை முறியடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ரஷ்ய ராணுவம் கணினியின் உதவியுடன் கூடிய உருவக படுத்தப்பட்ட அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் பயிற்சியை முன்னெடுத்து வருகிறது.

ஒரே ஒரு ஏவுகணை மூலம் பலதரப்பட்ட ஏவுகணைகள் மூலம் அணு ஆயுதத் தாக்குதலை தங்களுடைய எதிரிகளில் நிலப்பரப்புகளின் மீது எப்படி நிகழலாம் என்று கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சியமைப்பில் இந்த பயிற்சி நடைபெற்றது.

அதேபோல தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை எவ்வாறு தடுத்து முன்னேறலாம் என்ற விதத்திலும், இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதே போல அணு ஆயுத தாக்குதலை நடத்துவதன் மூலமாக கதிர்வீச்சு மற்றும் ரசாயன ஆபத்துக்களில் எப்படி செயலாற்ற வேண்டும் என்றும், ரஷ்யா பயிற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த பயிற்சியில் 100 பேர் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த பயிற்சியின் மூலமாக மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரில் இறங்கினால் எப்படி பதிலடி கொடுக்கலாம் என்றும் ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது.

Previous articleபெற்ற மகளிடமே இச்சையைத் தீர்த்துக் கொண்ட துணை தாசில்தார்! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
Next article1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! குதூகலத்தில் மாணவர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here