உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?

0
66

உலக சுகாதார நிலையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,கொரோனாத் தொற்று பாதிக்காமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் முட்டை வழங்கவும், மேலும் தொற்றின் காரணமாக தற்போது பள்ளிகளில் மூடி உள்ளதால் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வாரம் இருமுறை வழங்கும் முட்டையும், வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது வழக்கறிஞர் சுதா சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அமைப்பின் மூலம் முட்டைகள் வழங்க வேண்டும் என்றும் விட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் இதனை வழங்க தற்போது வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியர்களை இந்த பணியில் அமர்த்தலாம் என்றும் வாதாடப்பட்டது.

இவருக்கு எதிர் தரப்பினர் அதாவது அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அதில் அவர் ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் அதில் பிரச்சினைகள் உள்ளது என்றும் தெரிவித்தார்,மேலும் அவர் சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்கும் முடியாது என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு,டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டியதுதானே?டாஸ்மார்க் திறந்து இருக்கும் பொழுது அப்பொழுது உங்களுக்கு சமூக இடைவெளி பிரச்சினை வராதா என்று சரமாரியான கேள்வியை முன் வைத்தனர்.மேலும் வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும், என்றும் அதனை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதனை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்தனர்.

ஆனால் அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இதற்கு ஒரு நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியதால் வழக்கு விசாரணை 4 தேதி அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
Pavithra