விரைவில் பதவி விலகுகிறார் போரிஸ் ஜான்சன்! அடுத்த பிரதமர் இவர்தான்!

0
159

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விரைவில் விலகவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் பதவியிலிருந்த காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டாலும் அனைத்து விவகாரங்களிலும் அவர் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக, அவருடைய ஆட்சி முறை விமர்சனத்திற்கு உள்ளானது.

அதிலும் குறிப்பாக நோய் தொற்றை சரியாக கையாளவில்லை என்று சொல்லப்பட்டது, காலத்தில் பார்ட்டி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணை தலைமை கொறடா க்ரிஸ்பின்சர் மீது தாமதமாக நடவடிக்கை மேற்கொண்டது, என பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து வரிசை கட்டி நின்றன. ஆகவே அதிகாரிகள், அமைச்சர்கள், உள்ளிட்ட இருவர் அடுத்தடுத்து பதவி விலகியதால் நெருக்கடி உண்டானது.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து விளக்குவதாக நேற்று பகிரங்கமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இருவர் பதவி விலகிய சமயத்திலும் அசராமல் இருந்த இவர் தம்முடைய தலைமையிலான அமைச்சரவையிலிருந்து அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தது தான் இவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி தற்போது எழுந்திருக்கிறது இதில் ரிஷி சுனக் என்ற இந்திய வம்சாவளி நபரின் பெயர் முதல் வரிசையில் உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்தியரும் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி மருமகனுமான ரிஷி சுனக்குக்கு தான் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் இவர் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் தம்முடைய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

நோய் தொற்றுக் காலத்தில் பல்வேறு வரிகளை உயர்த்தியது, இவருடைய மனைவியும் பிரிட்டன் தொழிலதிபருமான அக்சதா மூர்த்தி வரியேய்ப்பில் ஈடுபட்டது என ரிஷி சுனக் மீது பல்வேறு விமர்சனங்கள் சமீபத்தில் எழுந்தபோதும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரிட்டன் பிரதமராக அவருக்கு பிரகாசமான வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.