பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

0
62

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று திமுக அதனுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் அந்த கட்சி ஆட்சிக்கு வந்து உடனடியாக அந்த அறிவிப்பை செயல்படுத்தியது.

இதனால் தற்சமயம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள் ஒருபுறம் பொதுமக்கள் மகிழ்ச்சிகாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தாலும், மறுபுறம் போக்குவரத்து துறை மிகுந்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இதுதொடர்பாக விசாரித்தால் வெகுவிரைவில் போக்குவரத்துத்துறை திவால் ஆவது உறுதி என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் எண்ணிக்கை, பேருந்து பயன்பாடு எரிபொருள் செயல்திறன், உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது எனவும், அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் தற்சமயம் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு உள்ளிட்டவற்றில் பணியாற்றும் பணியாளர்களின் 2020ஆம் ஆண்டில் 93 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் 150 நாட்களுக்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்களுக்கு 85 சதவீதமும் வழங்கப்பட இருக்கிறது.

அதே போல 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் 200 நாட்களுக்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும். 2 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றிய ஊழியர்களுக்கு 625 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த ரூபாய்கள் அனைத்தும் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகையாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 261 பணியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக 7 கோடியே 1 லட்சம் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.