உங்க ஆதார் எண்ணை வைத்து எத்தனை பேர் நம்பர் வாங்கி இருக்காங்க! இதோ செக் பண்ணுங்க!

0
56

பெருகிவரும் மோசடியில் எத்தனையோ பேர் ஆதார் எண்ணை வைத்து நமது பெயரில் போலி கணக்குகள் தூங்குவதோ அல்லது வங்கியிலிருந்து பணத்தை எடுப்பது மற்றும் பல்வேறு வலைதளங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவது போன்ற பல்வேறு ரீதியான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

 

நாம் வேறு ஒரு தேவைக்காக ஆதார் கார்டை கொடுத்து இருப்போம், ஆனால் அவர்கள் அதை வேறு விதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அதை நம்மை சிக்கலில் கொண்டு போய் சேர்த்துவிடும். அரசின் இந்த வலைதளம் உங்களது மொபைல் போனில் எத்தனை பேர்களின் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன. உங்களது ஆதார் கார்டு களை வைத்து எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை விலாவரியாக காண்பிக்கும்.

 

இந்த வலைதளத்திற்கு உள்நுழைந்து உங்களது நம்பரை கொடுக்க வேண்டும். நம்பர் கொடுத்து நீங்கள் என்டர் செய்தால் உங்களுக்கு பாஸ்வேர்டு வரும். அந்த பாஸ்வேர்டை நீங்கள் சரியாக தட்டச்சு செய்து என்டர் செய்தால் உங்கள் மொபைல் எண்ணின் மூலம் மற்றும் உங்களது ஆதார் கார்டு மூலம் எந்தெந்த எங்கள் தொடர்புடையதாக இருக்கிறதோ அத்தனை எண்களின் விவரமும் காண்பிக்கும்.

 

அந்த நம்பருக்கு கீழே மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 1. இது என்னுடையது அல்ல (This is not my).

2. இது என்னுடையது தான் ஆனால் அவசியமல்ல ( this is mine but not required)

3. எனக்குத் தேவையானது. ( This is required) என்று ஆப்ஷன்கள் இருக்கும். நீங்கள் அதை கிளிக் செய்து கீழே உள்ள ரிப்போர்ட் என்ற பட்டனை அழுத்தினால், அந்த நம்பரை உங்களது ஆதார் எண்ணில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும்.

 

உங்கள் பெயரில் இல்லாத அல்லது தேவையில்லாத எண்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் தக்கவைக்க வேண்டிய எண்களுக்கு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.

 

இந்த வெப்சைட்டில் உள்நுழைந்து https://tafcop.dgtelecom.gov.in/index.php# உங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற மொபைல் நம்பர்களை கண்டறியுங்கள் மற்றும் தேவையறிந்து அதன்பின் நீக்குங்கள்.

author avatar
Kowsalya