இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்! வெற்றியை தன்வசப்படுத்துமா இந்திய அணி?

0
83

இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோகன்னஸ்பர்க்கில் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் இந்த போட்டி ஆரம்பமாகிறது. இதுவும் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் தான் இதனை முன்னிட்டு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை சேர்ந்தவர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கடந்த 30 வருடங்களாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாடி வரும் இந்திய அணிக்கு ராசியான மைதானம் ஜொகனஸ்பர்க் என்று சொல்லப்படுகிறது. இங்கே இந்திய அணி ஒருபோதும் தோற்றது இல்லை, இந்த மைதானத்தில் தோல்வியே காணாத ஒரே அணி இந்திய அணி தான் என்று சொல்லப்படுகிறது. இந்த மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்ற இந்திய அணி அதில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் ட்ராவும் கண்டிருக்கிறது.

முதலாவது வெற்றி இந்திய அணிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு கிடைத்தது டிராவிட் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது. இதுதான் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாகவும் இருந்தது.

இரண்டாவது வெற்றி 2018 ஆம் வருடம் விராட் கோலியின் தலைமையில் கிடைத்தது இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா நிர்ணயம் செய்த 241 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 177 ரன்னில் ஆட்டமிழந்தது. இந்திய அணியின் தரப்பில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், புஜாரா, கேப்டன் கோலி உள்ளிட்டோர் இந்த ஆடுகளத்தில் சதம் கண்டிருக்கிறார்கள்.

தென் ஆபிரிக்க அணி இந்த மைதானத்தில் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 போட்டிகளில் வெற்றியும், 13 போட்டியில் தோல்வியும், 11 போட்டியில் ட்ராவையும், சந்தித்திருக்கிறது. இங்கே கடைசியாக நடைபெற்ற 20 டெஸ்ட் போட்டிகளில் 19 போட்டிகளில் முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.