இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
222
Selection for second level constable! This is the deadline! Apply now!
Selection for second level constable! This is the deadline! Apply now!
இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பளர் பதவிகளுக்கான மொத்தம் 3552 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 ஆகும். எனவே தகுதியுள்ள ஆண் பெண் விண்ணப்பதார்கள் www.tnsurb.tn.gov.in இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு விரைவில் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். மேலும் இவ்வலுவலக நூலகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவ்வலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2021 ம் வருடத்தில் தேர்ச்சி பெற்ற 18 நபர்கள் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் இவ்வலுவலக நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன் இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Previous articleகள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை கையிலெடுத்தது தேசிய குழந்தைகள் நல ஆணையம்!
Next articleதேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here