நகைக்கடன் தள்ளுபடி அரசாணை, புதிய செய்தி!

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை, புதிய செய்தி!

நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ … Read more

ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌.104 குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி … Read more

மாணவர்களின் படிப்புக்காக ஒரு கோடி வழங்கிய நடிகர் சூர்யா.!!

மாணவர்களின் படிப்புக்காக ஒரு கோடி வழங்கிய நடிகர் சூர்யா.!!

நடிகர் சூர்யா பழங்குடி இருளர் மாணவர்களின் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’ இந்த படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜி மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் நேற்று முதல் திரையிடப்பட்டு வருகின்றன. … Read more

BREAKING:தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

BREAKING:தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ஆம் தேதி வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான நவம்பர்-5 வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகள் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் பண்டிகைக்கு தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படும். … Read more

தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்!

Metro increases time for Deepavali! Happy people!

தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்! பொதுவாகவே தீபாவளி பண்டிகையை எல்லோரும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடத்தான் விரும்புவார்கள். அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பலர் அவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் தான். கடந்த கொரோனா காலத்தில் பல திட்டங்கள் ரத்தானது. அதில் மெட்ரோவும் ஒன்று. அதில் பல நேரக்கட்டுப்பாடுகள் அறிவித்து பயணங்களை குறைத்தது. இதுபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை மற்றும் நாளை … Read more

தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழ்நாட்டில் மிக கோலாகாலமாக கொண்டாடப்படும் விழாக்களில் தீபாவளி கொண்டாட்டம் மிக முக்கியமான ஒன்று. புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு செல்வது, புதுப்படம், பலகாரம் என ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளி களைகட்டி விடும். இம்முறை வார இறுதி நாளில் தீபாவளி வர இருப்பதால், பல பகுதிகளில் சுய காரணம் கருதி தங்கி இருப்பவர்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக தமிழக அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்குகின்றன. … Read more

BREAKING:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு.

BREAKING:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10‌.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது … Read more

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை … Read more

கனமழை காரணமாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும், இது அடுத்த 3 நாட்களுக்கு மெதுவாக மேற்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள் … Read more

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது .அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. … Read more