சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வரவிருக்கும் பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி இந்த  பண்டிகை காலத்தை குடும்பத்துடன் கொண்டாட மற்றும் போக்குவரத்தை சுலபமாகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை  வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் ரயில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய … Read more

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது - மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்று நோய்  பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது அதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தற்போது ஐந்தாம் கட்ட தளர்வுகளாக மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியுடன் சேர்த்து சில விதிமுறைகளை பின்பற்ற சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள் என்றால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல்,  பார்வையாளர்களின் … Read more

பெரம்பலூர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர்.! கட்சிப் பிரமுகர்கள் விபரீத முடிவு.!

பெரம்பலூர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர்.! கட்சிப் பிரமுகர்கள் விபரீத முடிவு.!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், மற்றும் பெயர் சேர்த்தல், மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியின் முகவர் நியமனம் செய்தல், போன்ற திட்டமிடலுக்காக பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே, … Read more

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம்! ரஜினியின் கருத்து!

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம்! ரஜினியின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உரிமையான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மீது சென்னை மாநகராட்சி 6.5 லட்சம் வரியை விதித்தது. இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை ரஜினி சார்பில்  அவரது தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதாவது கொரோனா காலகட்டத்தில் திருமண மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாத காரணத்தால் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் நேற்று இந்த மனு மீது விசாரணை … Read more

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிலும் நமது கைகளை சோப் அல்லது ஹேண்ட் வாஷ் அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிலும் கை விரல்கள் மற்றும் விரல்களின் நடுவில் மற்றும் நக இடுக்குகள் போன்ற இடங்களில் 30 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக தேய்த்துக் கழுவுதல் வேண்டும். இவ்வாறு  அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதன் … Read more

துரோக வரலாற்றுக்கு துணைப்போகும் பிரபல நடிகர் !?..கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்…!!

துரோக வரலாற்றுக்கு துணைப்போகும் பிரபல நடிகர் !?..கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்...!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,800 திரைப்படம் துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது! இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும். விஜய் சேதுபதி … Read more

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 3.25 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் என்பவர்  கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஓசூர், தர்மபுரி,வாணியம்பாடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியில் இடுப்பட்டுள்ளார் . அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி … Read more

8 கி.மீ. சாலை அமைப்பதால் 80 கி.மீ. சுற்றிவர தேவையில்லை! அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய மக்கள்!

8 கி.மீ. சாலை அமைப்பதால் 80 கி.மீ. சுற்றிவர தேவையில்லை! அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய மக்கள்!

பாலக்காடு அருகே சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய அதிகாரிகளின் காலில் விழுந்து ஆதிவாசி மக்கள் கண்ணீர் வடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில், பரம்பிக்குளம் வனப்பகுதியில் செம்மனாம்பதி ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு, கேரளாவில் இருந்து வாகனங்கள் வர வேண்டும் என்றால் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் வர வேண்டும். ஆனால், செம்மனாம் பகுதியில் இருக்கும் வனப்பகுதி … Read more

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கல்வி நிலையங்களை திறப்பதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9- 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. … Read more

தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கும், அதன்பின் சில தளர்வுகளும் தற்போதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் முழுமையாக குணமடையாதலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அக்டோபர் 1 தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்பது போன்ற பல தகவல்களும் வெளியானது. ஆனால் இன்றுவரை பள்ளிகள் வழக்கம் போல் … Read more