டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அந்த பதவிக்கு நான் ஆசையும் படவில்லை. ஒவ்வொரு டுவிட்டர் பதிவுக்கும் பதிலுரை எழுத வேண்டிய தேவையில்லை என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள் மீது நம்பிக்கை வளர்ந்து சிறந்து கொண்டிருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் மற்றும் அரிமா சங்க … Read more

பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்த சூப்பர் ஸ்டார்!!

பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்த சூப்பர் ஸ்டார்!!

கிருஷ்ணகிரி அருகே தனது பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை , இலவசமாக வழங்கி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்த் மூதாதையர்கள், பெற்றோர்கள் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போதும், ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது!

முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது!

முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது. வழக்கறிஞர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசென்ற போது வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம். கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட தெற்கு கருங்குளம் பயோனியர் தோட்டத்தில் முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் வனதுறையினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மூன்று வயதுடைய 8 கிலோ எடை கொண்ட முள்ளம்பன்றியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய வழக்கறிஞர்களான சுப்பிரமணியம், பெருமாள் பிள்ளை, இளமுருகு … Read more

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! தமிழகத்தின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் மிக சிலரே இன்றளவும் மக்களின் நினைவலைகளில் வருவர். அப்படி ஒரு அரசியல் தலைவர் தான் கருணாநிதி. அவரது ஆரம்ப கட்ட கால அரசியல் நுழைவு என்பது சாதாரணமாக அமையவில்லை, இவரது எழுத்து திறமையும், பேச்சு திறமையும் தான் இவரை அரசியலின் உச்சானி கொம்பிற்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. தன்னுடைய அசாத்திய பேச்சு திறமையால் மற்ற அரசியல் … Read more

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் – கனிமொழி!!

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - கனிமொழி!!

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என மதுரையில் கனிமொழி பேச்சு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த 142வது கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி பேசியதாவது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக துவக்கப்பட்ட தென் தமிழகத்தின் முதல் கல்லூரி அமெரிக்கன் கல்லூரி. தமிழகத்தில் 80 ஜாதிப் பிரிவுகள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மற்ற … Read more

மனநலம் பாதித்த மகளை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை!

மனநலம் பாதித்த மகளை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை!

மனநலம் பாதித்த மகளை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை! மகளின் நிலையை நினைத்து, விரக்தியில் விபரீத முடிவு! வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த பெருமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (48). இவர் காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேண்டாலட்சுமி அங்கன்வாடி பணியாளர். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், இவர்களது இரண்டாவது மகள் தனுஜா(16) பிறவியிலிருந்தே மனநலம் பாதித்தவர். கடந்த சில தினங்களாக மன நலம் பாதித்த … Read more

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!!

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!!

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!! தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதி நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துறை வாரியாக அத்துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது சட்ட மன்றத்தில் ஆளும் திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர் … Read more

ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது – தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேர் சித்திரை வீதிகளில் வலம் வந்த பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பழம், பூ வைத்து, தேங்காய் … Read more

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

சட்டப்பேரவையில் முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் துரைமுருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த மன்றம் ஒரு உயர்வானது . நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம்ம தொகுதியில் உள்ள 2.5 லட்சம் பேரில் நமக்கு தான் அந்த பாக்கியம் கிடைத்தது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. இந்த மன்றத்தில் நீண்ட காலம் பெரிய பெரிய … Read more

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞரின்- பல்லை பிடுங்கிய காவலர்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில நாட்களுக்கு முன், சிசிடிவி கேமராக்களை உடைத்த குற்றத்திற்காக சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, பல்லை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக, இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சிசிடிவி கேமராக்களை உடைத்த காரணத்திற்காக என்னை, அம்பாசமுத்தில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றார்கள். … Read more