மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் – கனிமொழி!!

0
142
#image_title

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என மதுரையில் கனிமொழி பேச்சு.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த 142வது கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி பேசியதாவது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக துவக்கப்பட்ட தென் தமிழகத்தின் முதல் கல்லூரி அமெரிக்கன் கல்லூரி. தமிழகத்தில் 80 ஜாதிப் பிரிவுகள் உள்ளன.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மற்ற அனைவருக்கும் கல்வி அறிவு, வேலை வாய்ப்பு புறக்கணிக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும் என கடிதம் எழுதினர்.

அதனாலேயே மதுரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக துவக்கப்பட்டது இந்த அமெரிக்கன் கல்லூரி.நாம் பெரும் இந்த கல்வியின் மூலமே உலகில் எந்த பகுதிக்கு சென்றாலும் நம்மால் வேலை பெற முடிகிறது. இந்த கல்வி பெற நம் சமுதாயம் எத்தனை போராட்டங்களை கடந்து வந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் குரல் எதையும் மாற்றும் வல்லமை கொண்டது. மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். சமுதாயத்தில் உங்களுக்கு ஏராளமான அழுத்தம் உள்ளது. அதிலிருந்து மாணவர்கள் மீண்டு வர வேண்டும். உங்கள் கடினமான உழைப்பால் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

author avatar
Savitha