தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

0
76

கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் நபர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமாணவர்களுக்கு சில நாட்களுக்குப் பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன அதிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குணம் அடைந்த பின்னரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்துல் இன்கெல் இது பற்றி கூறியுள்ளார். கொரோனா வந்து நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் குணம் அடைந்தவர்களுக்கும் 6 மாத காலத்திற்குள்ளாகவே சிறுநீரக கோளாறு உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதுவும் எந்த விதமான அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆறு மாதங்களுக்குப் பின் பரிசோதனை செய்யும் பொழுதுதான் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவிற்கு பிரச்சனை தீவிரமாக வருகிறது என்று சொல்லியுள்ளார். எனவே நீண்ட நாட்களுக்கு கொரோனாவில் சிகிச்சை அளித்து அதன் பின் குணமடைந்தவர்கள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு ஆளாக வேண்டும். ஆறு மாதம் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்